சிவனொளிபாதமலையை தூய தளமாக பராமரிக்க விசேட திட்டம்
எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை அடிப்படையாகக் கொண்டு சிவனொளிபாதமலை தளத்தை பொலித்தீன்/பிளாஸ்டிக் இல்லாத தூய தளமாக பராமரிக்க கிளீன் சிறிலங்கா கீழ், தொடர்ச்சியான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயற்படுத்தப்படவுள்ளதாக இலங்கை இராணவம் அறிவித்துள்ளது.
மேலும் இதன் ஆரம்ப திட்டம் நவம்பர் 25 ஆம் திகதி சிவனொளிபாதமலை உடமலுவைச் சுற்றியுள்ள பகுதியில் 50 இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நடைபெறவிருக்கும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் பிளாஸ்டிக் இல்லாததாக இருப்பதை உறுதி செய்வதற்கும், சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கும் அரச மற்றும் அரச சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டம், சிவனொளிபாதமலை நுழைவாயில்களைச் சுற்றியுள்ள பகுதியில் 29 ஆம் திகதி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

