இலங்கையைத் தொடர்ந்து அண்டை நாட்டு துறைமுகங்கள் மீது குறிவைக்கும் அதானி குழுமம்!
இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் உள்ள மேற்குக் கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 553 மில்லியன் டொலர் முதலீட்டின் வாயிலாக உள்நுழைந்த அதானி குழுமம் இப்போது, அண்டை நாடுகளின் துறைமுகங்கள் மீது பார்வையை செலுத்தியுள்ளது.
கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அதானி, சர்வதேச வளர்ச்சி நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவுடன் அமெரிக்கா வழங்கிய நிதியுதவியானது, இந்தியக் கூட்டு நிறுவனங்களுக்கான சர்வதேச ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
அடுத்த திட்டம்
மேலும் அண்டை நாடுகளான பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் தான்சானியாவின் துறைமுகங்களின் மீது அதானி குழுமத்தின் அடுத்த திட்டம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் இஸ்ரேலில் இருக்கும் திட்டங்களைத் தவிர, அதானி குழுமத்தின் வருமானத்தில் 90 சதவீதத்தை துறைமுக வணிகம் கொண்டுள்ளது என்றும், நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து விரிவடைந்து வருவதால் இது இன்னும் அதிகரிக்கும் என்றும் அதானி கூறியுள்ளார்.