ரஷ்யா மீது மேலதிக தடை - அதிரடியாக அறிவித்தார் பைடன்(video)
உக்ரைன் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்யா மற்றும் அதிபர் விளாடிமிர் புடின், இனி உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ரஷ்யா மீதான கூடுதல் தடைகள் பற்றி விளக்கினார். அதன் விபரம் வருமாறு,
ரஷ்யா மீது நீண்டகால தாக்கத்தை அதிகரிக்கவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீதான அதன் தாக்கத்தை குறைக்கவும் வலுவான தடைகளை இனி விதிக்கவிருக்கிறோம்.
டொலர்கள், யூரோக்கள், பவுண்டுகள், யென் போன்றவை மூலம் வணிகம் செய்யும் ரஷ்யாவின் திறனைக் கூட்டாகக் கட்டுப்படுத்த முடிவெடுத்த G7 தலைவர்களுடன் தாமும் உடன்படுவதாக அதிபர் பைடன் கூறினார்.
ரஷ்யாவின் நிதியுதவி மற்றும் இராணுவத்தை வளர்க்கும் திறனை இனி அமெரிக்கா தடுத்து நிறுத்தும். 21ஆம் நூற்றாண்டின் உயர் தொழில்நுட்ப பொருளாதாரத்தில் போட்டியிடும் ரஷ்யாவின் திறனை இந்த தடைகள் குறைக்கும்.
ரஷ்ய ரூபிள் பண மதிப்பு மிக, மிக மோசமான நிலையை அடையும். ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பிறகு ரஷ்ய பங்குச் சந்தை இன்று வீழ்ச்சியடைந்ததையும் அதிபர் பைடன் சுட்டிக்காட்டினார்.
"ஒரு ட்ரில்லியன் டொலர்கள் அளவுக்கு சொத்துக்களை வைத்திருக்கும் ரஷ்ய வங்கிகள் மீது இப்போது தடைகளை விதிக்கிறோம்" என்று பைடன் கூறினார். "நாங்கள் ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றை ஏற்கனவே சர்வதேச நிதி விவகாரங்களில் தலையிடாத வகையில் துண்டித்துவிட்டோம். அந்த வங்கி அந்நாட்டின் வங்கிச் சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது," என பைடன் தெரிவித்தார்.
Watch live as I deliver remarks on Russia’s unprovoked and unjustified attack on Ukraine. https://t.co/fsc84Sq6F6
— President Biden (@POTUS) February 24, 2022
