மஞ்சள் மற்றும் இஞ்சிக்கு சிறப்பு காப்பீட்டு - விவசாய அமைச்சு
புதிய இணைப்பு
மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகிய பயிர்செய்கைகளுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
குறித்த காப்பீட்டுத் திட்டங்களை விவசாய அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், இயற்கை பேரழிவுகள், நோய் தாக்கங்கள், பூச்சி சேதம் மற்றும் காட்டு யானை தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, இந்த காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
காப்பீட்டுத் தொகை
அதன்படி, இஞ்சிக்காக ஏக்கருக்கு 2 இலட்சம் ரூபாய் வரையும், மஞ்சள் பயிர்ச்செய்கைக்காக ஏக்கருக்கு அதிகபட்சமாக 7 இலட்சம் ரூபாய் வரையும் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காட்டு யானைகளினால், அதிக ஆபத்துள்ள பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களின் விவசாயிகளுக்கே இந்த சலுகை காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
செவனகல சீனி தொழிற்சாலையின் கரும்புத் தோட்டங்கள் எரிந்தமையினால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரச தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
லங்கா சீனி (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான செவனகல சீனி தொழிற்சாலையின், கரும்புத் தோட்டங்களுக்கு 2025 ஒகஸ்ட் 16, 20, 21, 22, 24 மற்றும் 2025 செப்டம்பர் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் ஒரு குழுவினர் தீ வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மெற்றிக் டன்னுக்கு 7000 ரூபாய் வீதம் இழப்பீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |