வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படையின் தளபதி நியமனம்! (படங்கள்)
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படையின் தளபதி வசந்த கரன்னாகொட (Wasantha Karannagoda) நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச தலைவரின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வடமேல் ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒஃப் ஃப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றம் சட்டப்பட்டிருந்ததை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லமுடியாது என கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
குறித்த வழக்கில் 14 ஆவது சந்தேகநபராக வசந்த கரன்னாகொட பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
අතිගරු ජනාධිපතිතුමා විසින් අද(09) දින නව වයඹ පළාත් ආණ්ඩුකාරවරයා වශයෙන් අද්මිරාල් ඔෆ් ද ෆ්ලීට් වසන්ත කුමාර් ජයදේව කරන්නාගොඩ මහතා පත්කරන ලදී.#lka
— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) December 9, 2021



