சாமிக்க கருணாரத்னவின் முகத்தை பதம் பார்த்த பந்து! சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி
Kandy
Sri Lanka Cricket
Chamika Karunaratne
By pavan
லங்கா பிரீமியர் லீக் போட்டியில் நேற்று, காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கண்டி ஃபால்கன்ஸ் அணியின் சாமிக்க கருணாரத்னவுக்கு, ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் நான்கு பற்களை இழந்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் (LPL) 2022 தொடரின் நான்காவது போட்டியில் பிடி எடுப்பொன்றை எடுக்க முயற்சித்த போது, அவர் முகம் அடிபட்டுள்ளது.
பின்னர் பந்தும் அவரது முகத்தைத் தாக்கியுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து உடனடியாக சத்திரசிகிச்சைக்காக காலியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் அவர் களமிறங்குவார்

இந்நிலையில், சாமிக்க உறுதியுடன் இருப்பதாகவும், மீண்டும் அவர் களமிறங்குவார் என்றும், அவருடைய அணியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி