தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை - பயங்கரவாதிகள் எழுதிய ஆவணம்
பாகிஸ்தானில் அவ்வப்போது ஆப்கானிஸ்கானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காவல்துறை மற்றும் இராணுவத்தினரை குறி வைத்து அவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தங்கள் இயக்கத்தை பற்றி பாகிஸ்தான் இராணுவத்திற்கு இரகசிய தகவல் கொடுத்ததாக வாலிபர் ஒருவரை ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலைசெய்துள்ளனர்.
காவல்துறையிடம் முறைப்பாடு
இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறை தெரிவிக்கையில்,
“கொலைசெய்யப்பட்ட வடமேற்று கைபர் பார்கை என்ற கிராமத்தை சேர்ந்த ரஷித்துல்லா ( 17) சம்பத்தன்று இவர் தனது உந்துருளியில் வெளியில் சென்றுள்ளார்.
அவரை குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவரை பற்றி எந்த தகவல் கிடைக்கவில்லை. இது பற்றி காவல்துறையிடமும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கொடூர செயல்
இந்த சூழ்நிலையில் அவரை தேடுகையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ரஷித்துல்லா தலை துண்டிக்கபட்டு கிடந்தார். அவர் அருகே பயங்கரவாதிகள் எழுதிய ஆவணமும் கிடந்தது.
அவர் பயங்கரவாதிகள் குறித்து பாகிஸ்தான் இராணுவத்திற்கு தகவல் கொடுத்து வந்தததால் கோபம் அடைந்த பயங்கரவாதிகள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”என தெரிவித்திருந்தனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
