நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை
கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு அப்பால் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால் நாட்டில் தற்போது சில மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மருந்து பற்றாக்குறை
அத்துடன் கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டிருந்தால் மருந்துகள் உரிய முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிப்பதற்கு பிராந்திய கொள்முதல்களுக்காக மருத்துவமனைகளுக்கு 3,500 மில்லியன் ருபாய் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுவதுடன், சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இணக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 10 மணி நேரம் முன்
