ரணிலின் கைதில் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்ட மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவர் கைது செய்யப்பட்டதற்குப் பின்னால் உள்ள குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்ற வாதங்கள் உள்ளன, அது உண்மைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண நூலக எரிப்பு
எனினும், 1977 இல் அவரது அரசாங்கம் தேர்தலுக்குப் பிந்தைய பாரிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்ததாகவும் அதற்கு ரணிலும் ஜே.ஆரும் பொறுப்பேற்றிருந்த நிலையில் அந்த நேரத்திலேயே அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் பிமல் கூறியுள்ளார்.
அத்துடன், 1981 யாழ்ப்பாண நூலக எரிப்பு சம்பவத்திற்கும், 1983 ஜூலை கலவரத்திற்கும் அமைச்சரவையில் பங்கிற்கு ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்க வேண்டியவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி
மேலும் 1987 முதல் 1990 வரை 60,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததிலும், பட்டலந்த துன்புறுத்தல் மைய குற்றச்சாட்டுகளிலும் அவர் மீது பொறுப்பு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, 2015 மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் கூட ரணிலின் தொடர்பு தெளிவாக இருந்தும் கைது செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் பிமல் தெரிவித்துள்ளார்.
எனவே, 40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய ஒருவர், இப்போது தங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுவதாகவும், விசாரணை அதிகாரிகள் தங்கள் கடமைகளை நேர்மையுடனும் தடையின்றியும் செய்ய முடியும்," என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 12 மணி நேரம் முன்
