இலங்கை படையினரை சுட்டு வீழ்த்துங்கள்! இந்திய அரசை நாடும் வைகோ

Indian fishermen Sri Lanka India Sri Lanka Navy Sri Lanka Fisherman
By pavan Nov 20, 2023 11:46 AM GMT
Report

இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தாவது,

எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றதாக கூறி, பாம்பன் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களுடைய படகுகள், மீன்பிடி வலைகள், திசைகாட்டும் கருவிகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

அடித்து கொன்ற வட்டுக்கோட்டை காவல்துறையினர்..! இறக்கும் முன் இளைஞனின் பகீர் வாக்குமூலம் (காணொளி)

அடித்து கொன்ற வட்டுக்கோட்டை காவல்துறையினர்..! இறக்கும் முன் இளைஞனின் பகீர் வாக்குமூலம் (காணொளி)

கடற்கொள்ளையர்கள் 

இலங்கை கடற்படையினர் மட்டுமல்லாது கடற்கொள்ளையர்கள் என்ற பெயரில் அந்த நாட்டு குண்டர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றார்கள். கடந்த நாற்பது வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழக மீனவர்களின் பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் இருக்கின்றன.

பல்வேறு சூழல்களை கடந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இலங்கை படையினரை சுட்டு வீழ்த்துங்கள்! இந்திய அரசை நாடும் வைகோ | Afraid India Have A Border Dispute Sri Lanka Army

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கிய போது தமிழக அரசு பலகோடி ரூபாய் மதிப்பிலான உணவு, மருந்து பொருட்களை அனுப்பி உதவியது.

அங்குள்ள தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உதவியிருக்கிறது.

அடித்து கொன்ற வட்டுக்கோட்டை காவல்துறையினர்..! இறக்கும் முன் இளைஞனின் பகீர் வாக்குமூலம் (காணொளி)

அடித்து கொன்ற வட்டுக்கோட்டை காவல்துறையினர்..! இறக்கும் முன் இளைஞனின் பகீர் வாக்குமூலம் (காணொளி)

சர்வதேச நாணய நிதிய உதவி

இந்திய அரசு இதுவரை 32,000 கோடி ரூபாய் இலங்கைக்கு கடனுதவி வழங்கியிருக்கிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி செய்வதற்கும், உலக வங்கி கடன் வழங்குவதற்கும் இந்தியா சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

ஆனால், இலங்கை கடற்படை எந்தவித மனிதாபிமானமும் இன்றி தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்தும், கைது செய்தும், அச்சுறுத்தியும் வருவது வாடிக்கையாகி விட்டது.

இலங்கை படையினரை சுட்டு வீழ்த்துங்கள்! இந்திய அரசை நாடும் வைகோ | Afraid India Have A Border Dispute Sri Lanka Army

ஒன்றிய அரசு இதுவரை இப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை. தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாப்பது ஒன்றிய அரசின் கடமை.

சுட்டு வீழ்த்த வேண்டும்

பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை என்றால், இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்த வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும்.

தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளாவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.

தமிழர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், கட்சத்தீவை மீட்கவும் ஒன்றிய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
நன்றி நவிலல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025