எரிவாயு விலை அதிகரிப்புக்கு எதிராக சிலிண்டர் மாதிரிகளுடன் போராட்டத்தில் குதித்த மக்கள்
எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் இம்முறை பாதீட்டுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது இன்று (17.11.2026) இடம்பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற மாதாந்த சபைக் கூட்டத்திற்கு எரிவாயு சிலிண்டர்களின் மாதிரிகளைக் கொண்டுவந்து அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நான் இப்போது மிகவும் விலை உயர்ந்தவன்
ஹோமாகம பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் பேரணியாக சபை மண்டபத்திற்குச் சென்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் மாதிரி ஒன்றில் “நான் இப்போது மிகவும் விலை உயர்ந்தவன்” என்ற வாசகமும் காட்சிப்படுத்தப்பட்டது.
நியாயமற்ற முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியதுடன், எரிவாயு விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |