விடுமுறை முடித்து கடமைக்கு திரும்பிய காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த துயரம்( படங்கள்)
accident
police
death
By Sumithiran
ஹபரணை, ஹதரஸ்கொடுவ பிரதேசத்தில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டியுடன் கந்தளாய் அக்போபுர காவல் நிலைய பொறுப்பதிகாரி சென்ற கார் நேருக்கு நேர் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜம்புகஹாபிட்டிய, கந்தலியத்த, இலக்கம் 37 இல் வசிக்கும் தஹம்பத் முதியன்சேலாகே குணதிலக பண்டா தஹம்பத் (48) என்பவரே உயிரிழந்தவராவார்.
ஓ.ஐ.சி., விடுமுறையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பும் போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த அவர் உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹபரணை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதான காவல் பரிசோதகர் என்.பி.எஸ்.ஜெயலத் மற்றும் போக்குவரத்து பொறுப்பதிகாரி டி.ஜே.மதுஷங்க திஸாநாயக்க ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி