விளையாட்டுத் துறை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து
Vavuniya
By Sathangani
விளையாட்டுத் துறையை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று (17) வவுனியா பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இதன் மூலமாக விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கையொப்பம் இட்டனர்

வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரி. மங்களேஸ்வரன் மற்றும் குட்வில் நிறுவனத்தின் ஸ்தாபகர் குசல் குணசேகர ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பீடாதிபதிகள், பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
5ம் ஆண்டு நினைவஞ்சலி