மோடியின் ஒப்பந்தங்கள் குறித்து அம்பலமாகப்போகும் உண்மைகள்!! வெளியிடப்பட்ட அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது இந்தியாவுடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) நாடாளுமன்ற அமர்வில் அது தொடர்பில் கேள்வியெழுப்பவுள்ளதாக அவர் இன்று (06) குறிப்பிட்டுள்ளார்.
“இந்த ஒப்பந்தங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த ஒப்பந்தங்கள் குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது.” என்றும் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
இந்திய விரிவாக்கம்
அதன்படி, நாட்டு மக்களுக்கு இந்த ஒப்பந்தங்களைப் பற்றி அறிய உரிமை இருப்பதால், தாங்கள் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி கேட்வுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்திய விரிவாக்கம் பற்றி கூச்சலிடும் ஒரு கட்சி மோடியை வரவேற்று அவருக்கு மிக உயர்ந்த மரியாதை செலுத்துவதைக் கண்டு தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இது செயற்படுத்தப்பட வேண்டும் எனவும், இலங்கை கிட்டத்தட்ட ஒரு பொருளாதார சக்தியாக இருக்கும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
