கடும் அழுத்தம்! மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
Gotabaya Rajapaksa
SriLanka
Agricultural and Agrarian Insurance Board
M.M.C. Ferdinando
Premachandra Eba
By Chanakyan
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர எபா (Premachandra Eba) பதவி விலகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் இனி மனசாட்சிப்படி செயற்பட முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான பதவி விலகல் கடிதத்தை விவசாய அமைச்சருக்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் மின்சார விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ (M.M.C. Ferdinando) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் பதவி விலகவுள்ளதாக, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்கசவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்