பெரிய வெங்காய செய்கை குறித்து உடனடி அறிக்கை அளிக்க வேண்டும் என விவசாய அமைச்சர் கோரிக்கை
நாட்டில் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பாக விவசாயத் திணைக்களத்திடம் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த வெங்காயச் செய்கை கடந்த ஏழெட்டு வருடங்களாக தோல்வியடைந்துள்ளதாகவும், விவசாயிகள் பெரிய வெங்காயச் செய்கையைக் கைவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் பணிப்புரை

இதன்படி, வெங்காயச் செய்கை தொடர்பில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு விவசாயத் திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் வருடாந்த பெரிய வெங்காயத்தின் தேவை 300,000 மெற்றிக் தொன் எனவும், தேசிய உற்பத்தி 4,716 மெற்றிக் தொன் என்பதால் இக்காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் அளவு 131,795 மெற்றிக் தொன் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.