இந்தியாவின் திடீர் அறிவிப்பு - வெங்காய விலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்
இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு வரியை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாகவும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதி வரியை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வெங்காயத்தின் விலை
வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா வெங்காயத்தை ஏற்றுமதி செய்கின்றது.
இதற்கமைய, இலங்கையில் இறக்குமதி வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழலில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிப்புகள் மக்களுக்கு மேலும் சுமையாகவே மாறும்.