நாட்டிலுள்ள பயணிகளின் பாதுகாப்பு: பேருந்துகளில் புதிய தொழிநுட்பம்
இலங்கை பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தநடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 40 தொழிநுட்ப கருவிகளை பேருந்துகளில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பயன்படுத்தி, சாரதிகள் சோர்வாக இருந்தால், தூக்கத்தில் இருந்தால், நித்திரைக் கலக்கம் இருந்தால் அல்லது பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால் அவர்களுக்கு நினைவூட்ட இந்த தொழிநுட்பம் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சங்களை இலங்கையில் உள்ள நிறுவனங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன ஆனால் அவை இலங்கையில் பொதுப் போக்குவரத்திற்கு குறிப்பாக மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள் தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
