பெண் அடிமைத்துவத்தை நடைமுறைப்படுத்தும் ஆப்கானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.நா!
ஆப்கானில் நடந்து வரும் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஆப்கானுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆப்கானில் இருந்து கடந்த வருடம் அமெரிக்க இராணுவ படைகள் வெளியேறியதை அடுத்து தீவிரவாத அமைப்பான தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
பெண்களுக்கான கல்வி மறுப்பு
இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான பல உரிமைகள் தொடர்ந்து அங்கு மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஆப்கானில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கான கல்வியை தடை செய்து ஆப்கான் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சிறுமிகளும் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்நாட்டில் பெண்கள் உயர் பதவி வகிப்பதையும் கடந்த வாரம் தலிபான் அரசு ரத்து செய்தது.
இதற்கு எதிராக அந்நாட்டுப் பெண்கள் அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். அத்துடன் உறுப்பு நாடுகளும் தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.
பணியை நிறுத்திய தன்னார்வ அமைப்புக்கள்
இத்தகைய நிகழ்வின் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் சில உதவித்திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
பெண் பணியாளர்கள் இல்லாமல் திட்டங்களை இயக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஐ.நா அதிகாரிகள் பெண்கள் பணி புரிவது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல.
“Banning women from humanitarian work has immediate life-threatening consequences for all Afghans.”
— United Nations (@UN) December 29, 2022
Top UN agency officials & civil society organization heads stress that women's participation in aid delivery in Afghanistan must continue. https://t.co/Cm6ps3cGzV
அது தொடர வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் ஆப்கான் அதிகாரிகள் தங்களின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
தற்போது தலிபான்களின் இந்த அதிரடி உத்தரவால் தங்களுடைய அனைத்து வேலைகளையும் தன்னார்வ அமைப்புகள் நிறுத்தி விட்டன. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு செல்லும் ஐ.நா
இதேவேளை இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. சபையின் உதவித்தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் செல்ல உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தலிபான் அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
