தலிபான்கள் வசமான ஆப்கான்- உடனடி நடவடிக்கை எடுத்துள்ள இந்தியா!
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டிலுள்ள இந்தியார்களுக்கான விசாவில் இந்திய அரசாங்கம் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
இதன்படி ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா செல்வதற்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலுள்ள இந்தியர்கள் மின்னணு முறையில் அவசரகால விசா பெறும் புதிய நடைமுறையை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா செல்வதற்கு யாராவது விரும்பினால் அவர்களுக்கு ‘இ-எமர்ஜென்சி எக்ஸ் மிஸ்க் விசா’ (e-Emergency X-Misc Visa) எனப்படும் உடனடி மின்னணு விசா வழங்குவதற்கும் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விசாவுக்கு விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்பதுடன், அங்கு வசிக்கும் இந்துக்கள்-சீக்கியர்கள் இந்தியா செல்லலாம் என்று கூறுப்படுகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அங்கிருந்த தூதரகங்களை மூடியுள்ள நிலையில், தூதரக ஊழியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இவர்களில் பலர் நாட்டை விட்டு சென்ற நிலையில் ஏனையவர்கள் தங்களது நாட்டுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறனர். இந்தியாவும் தனது தூதரகத்தை மூடிவிட்டு ஊழியர்களை பத்திரமாக வெளியேற்ற ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய தூதுவர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து செல்வதற்காக விமானப்படையை சேர்ந்த சி-17 என்ற சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 120 தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் அந்த விமானம் மூலம் டெல்லிக்கு சென்றிறங்கியுள்ளனர். ஏற்கனவே முதல் விமானத்தில் 129 இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில் மேலும் 120 பேர் சென்றுள்ளனர்.
மேலும் 420 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை அழைத்து செல்வதற்காக மீண்டும் விமானங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
