இலங்கையில் இப்படியும் ஒரு அரசியல்வாதி
"நான் வாகன அனுமதிச் சீட்டை விற்று மக்களுக்கு பணம் விநியோகித்த ஒரு மனிதன்" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டமை தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது வஜிர அபேவர்தன இவ்வாறு கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் வரலாறு
ஐக்கிய தேசியக் கட்சி சட்டவிரோதமாக சொத்துக்கள் சம்பாதித்த வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை, மாறாக தனிப்பட்ட செல்வத்தை செலவழித்து மக்களுக்கு சேவை செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
தனது அரசியல் வரலாற்றை அறிந்த அனைவரும் தான் சட்டவிரோதமாக எந்த செல்வத்தையும் சம்பாதிக்கவில்லை என்பதற்கு சாட்சியமளிப்பார்கள் என்றும், நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் அதிகபட்ச ஆதரவை வழங்குவேன் என்றும் அபேவர்தன கூறினார்.
சிஐடியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள்
குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு கோரிய ஆவணங்களை தாம் சமர்ப்பிக்கவில்லை என்று சில ஊடகங்கள் தவறாகக் தெரிவித்ததாகவும், தேவையான அனைத்து ஆவணங்களையும் தாம் முறையாகச் சமர்ப்பித்ததாகவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
