இரண்டாக பிளவடைந்த எதிர்க்கட்சி! சஜித் தரப்பை விட்டு வெளியேறும் முக்கியஸ்தர்கள்
சஜித் பிரமேதாசவின் (Sajith Pramedasa) கட்சியில் இருந்த உட்கட்சி புசல் வெடித்து சிதறியதில், சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) புதிய கட்சி தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால் தான் தனிக்கட்சி அமைத்து வெளியேறப் போவதாக அறிவித்தார்.
எதிரான அலை
நாடாளுமன்றத்தில் காரசாரமாக பேசி சண்டை பிடித்து வெளியில் வந்து தோலில் கைபோட்டு கதைக்கும் அரசியல் டீல் செய்வதற்கு நான் விடமாட்டேன், அதற்கெதிராக செற்படுவேன்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்வார்கள் என அவர் நியமித்துள்ள கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தொடர்பில் விசேட கவனம் செத்த வேண்டும்.
இரண்டு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் நான் தோல்வியடைந்தேன் என்றால்,மக்கள் என்னை விரும்பவில்லை அதை நான் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இன்று நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான அலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது, அதை எதிர்க்கட்சியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்பாவின் அரசியல்
அதற்காக அப்பாவின் அரசியல் செல்வாக்கில் மகன் வெற்றி பொறுவார் அல்லது மக்கள் விரும்புவார்கள் என்பது பழைய காலாசாரம்.
மக்கள் இன்று மாற்றமடைந்துள்ளதுடன் அந்த மாற்றத்தை ஏற்ப நாமும் செயற்பட வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைக்க வேண்டும் அதில் சிலரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.அவர்கள் யார் என்று கூறுவதில் நான் அஞ்ச போவதில்லை.
சில நாட்களில் அது தொடர்பில் நாங்கள் ஊடகங்களில் பகிரங்க அறிவித்தல் விடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
