வெளிநாட்டில் இருந்து வவுனியா வந்த இருவருக்கு எயிட்ஸ்
Vavuniya
HIV Symptoms
By Sumithiran
வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த இரண்டு ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த இருவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
ஆண்,பெண் என 12 பேர் உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அவர்களில் சிகிச்சைக்கு பிந்திய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.
ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
6ம் ஆண்டு நினைவஞ்சலி