அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப்படை உலங்கு வானூர்தி
Ministry of Defense Sri Lanka
Climate Change
Sri Lanka Air Force
By Thulsi
விமானப்படைக்கு சொந்தமான பெல் - 412 ரக உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கேப்டன் எராண்டா கீகனகே தெரிவித்துள்ளார்.
இன்று (25) காலை ஹொரணையில் உள்ள தக்ஸிலா கல்லூரி மைதானத்தில் அவசரமாக இந்த உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டது.
சீரற்ற காலநிலை
பயிற்சிக்காக இன்று (25) காலை இரத்மலானை (Ratmalana) விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட உலங்கு வானூர்தி சீரற்ற காலநிலை காரணமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தரையிறங்கிய உலங்கு வானூர்தி சிறிது நேரம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இரத்மலானை விமானப்படை தளத்திற்குத் திரும்பி சென்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
