சீனாவிடமிருந்து சிறிலங்கா விமானப்படைக்கு வருகிறது இரண்டு விமானங்கள்
சீனாவிடமிருந்து இரண்டு Y-12 IV விமானங்களை விமானப்படை வாங்கவுள்ளது.
சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு Y-12 IV ரக விமானங்களை வாங்குவவதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு அண்மையில் சீனாவின் தெற்காசிய தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் லியு சுவான் மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது.
சிறிலங்கா விமானப்படையின் விமானக் கண்காணிப்பிற்கு
விமானப்படை ஆதாரங்களின்படி, ஹார்பின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த Y-12 IV கள் சிறிலங்கா விமானப்படையின் விமானக் கண்காணிப்பிற்கு ஒரு தனித்துவமான அம்சமாகும்.
இது நாட்டில் பல்வேறு விமான சேவைகள் மற்றும் செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்தவும் பிராந்திய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும் உதவும்.
இது தொடர்பான ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
