சிங்கப்பூரில் ஏர் இந்தியா விமானத்துக்கு நடந்தது என்ன..! அந்தரிப்பில் பயணிகள்
சிங்கப்பூரிலிருந்து சென்னை நோக்கி புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் புறப்பட முடியாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 168 பயணிகள் சென்னைக்கு திரும்பவிருந்த நிலையில், இயந்திர பிரச்சினையைத் தொடர்ந்து, விமான பொறியாளர்கள் குழு பழுது சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், பழுதை சரி செய்யும் பணிகள் நீடித்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கடும் அவதி
இதனை தொடர்ந்து, சில பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள பயணிகள் சிங்கப்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விமான சேவை தாமதமானதாலும், ரத்து செய்யப்பட்டதாலும், சென்னையை நோக்கிச் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, விமானம் பழுதைத் தீர்த்த பிறகு, இன்று காலை மீண்டும் சென்னைக்கு புறப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
