லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் வெடித்து சிதறிய தருணம்..! அதிர வைக்கும் விபத்து அறிக்கை

India Flight Death Air India
By Thulsi Jul 12, 2025 08:11 AM GMT
Report

இந்தியா - குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு (London) புறப்பட்ட ஏர் இந்திய விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 12 ஆம் திகதி ஏர் இந்திய விமானம் (Air india flight) கோர விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர்.

அதிர வைக்கும் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12.07.2025) நள்ளிரவு வெளியானது.

கடலுக்குள் மூழ்கும் விமான நிலையம் : தடுமாறும் ஜப்பான் அரசு

கடலுக்குள் மூழ்கும் விமான நிலையம் : தடுமாறும் ஜப்பான் அரசு

எரிபொருள் விநியோகம் தடை

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின்களில் எரிபொருள் விநியோகம் தடைபட்டது.

லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் வெடித்து சிதறிய தருணம்..! அதிர வைக்கும் விபத்து அறிக்கை | Air India Flight Crash Report Says Fuel Cut Off

இதனால் என்ஜின்களின் சக்தி குறைந்தது. விமானி ஒருவர் மற்ற விமானியிடம், "ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள்?" என்று கேட்டதாகப் பதிவாகி உள்ளது.

அதற்கு மற்ற விமானி, "நான் அப்படி எதுவும் செய்யவில்லை" என்று பதில் அளித்துள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களும் கண்டுபிடிக்கப்பட்டு விமான நிலையத்தின் ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமான பாகங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. என்ஜின் 1 தானாகவே மீண்டும் இயங்க முயற்சித்தது. அது வெற்றிகரமாக இயங்கியது.

தெற்காசிய கால்பந்து போட்டியில் கால் பதித்த திருகோணமலை யுவதி

தெற்காசிய கால்பந்து போட்டியில் கால் பதித்த திருகோணமலை யுவதி

விமானத்தில் மின்சாரம் தடை

ஆனால் என்ஜின் 2-வை மீண்டும் இயக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. விமானத்தில் மின்சாரம் தடைபட்டதால், அவசரகால மின்சக்தி ஆதாரமான ராம் டர்பைன் (RAT) தானாகவே இயங்கியது.

விமானம் புறப்படும்போது இறக்கை மற்றும் தரையிறங்கும் சக்கரங்கள் சரியான நிலையில் இருந்தன. ஆனால் விபத்துக்குப் பிறகு எரிபொருள் கட்டுப்பாட்டு கருவிகள் அணைந்த நிலையில் இருந்தன.

லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் வெடித்து சிதறிய தருணம்..! அதிர வைக்கும் விபத்து அறிக்கை | Air India Flight Crash Report Says Fuel Cut Off

இதன் மூலம் விமானம் நடுவானில் பறக்கும்போது எரிபொருள் தடைபட்டது உறுதியாகிறது. விமானத்தை முறையாகப் பராமரித்துள்ளார்களா என்பதை அறிய, விமானப் பராமரிப்புப் பதிவுகளை ஆய்வு செய்தார்கள்.

அதன்படி, விமானத்தில் கடைசியாக L1-1 மற்றும் L1-2 ஆகிய பெரிய பராமரிப்புப் பணிகள் 38,504:12 மணி நேரங்களுக்கு முன்பும், 7,255 முறை விமானம் இயக்கப்பட்ட பின்பும் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்த பெரிய பராமரிப்புப் பணி (D-check) டிசம்பர் 2025-ல் செய்யப்பட இருந்தது. இடது பக்க என்ஜின் (ESN956174) மே 1, 2025 அன்றும், வலது பக்க என்ஜின் (ESN956235) மார்ச் 26, 2025 அன்றும் நிறுவப்பட்டன.

விபத்து நடந்த அன்று, விமானத்தில் நான்கு Category 'C' Minimum Equipment List (MEL) குறைபாடுகள் இருந்தன.

இவை ஜூன் 9, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஜூன் 19, 2025 வரை அவை சரி செய்யப்படாமல் இருந்தன. விமானத்தின் கதவு கண்காணிப்பு கேமரா, விமான நிலைய வரைபடம், கம்ப்யூட்டர் நெட்வேர்க் மற்றும் விமானத்தில் இருந்த பிரிண்டர் ஆகியவை பழுதடைந்திருந்தன இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதிரப்போகும் உலக சந்தை: அமெரிக்காவுக்கு தயங்காமல் பதிலடி கொடுத்த இந்தியா!

அதிரப்போகும் உலக சந்தை: அமெரிக்காவுக்கு தயங்காமல் பதிலடி கொடுத்த இந்தியா!

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025