கடலுக்குள் மூழ்கும் விமான நிலையம் : தடுமாறும் ஜப்பான் அரசு
ஜப்பானின் (Japan) ஒசாகா கடல் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் அதிசயம் என கருதப்பட்ட கன்சாய் சர்வதேச விமான நிலையம், தற்போது நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரின் செயற்கை தீவில் கன்சாய் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை கடல் பரப்பின் மேல் மிதப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம்
கடலின் மேற்பரப்பில் மிதப்பதற்காக களிமண் பயன்படுத்தி இதன் அஸ்திவாரத்தை அமைத்தனர்.
இந்த கட்டமைப்பு நீண்ட காலம் தாக்கு பிடிக்கும் என கருதப்பட்ட நிலையில், தற்போது கணிப்புக்கு முன்னதாகவே கடலுக்குள் மூழ்க தொடங்கியுள்ளது. செயற்கை தீவின் மேற்பரப்பு 13 அடியும், விமான நிலையம் 45 அடியும் மூழ்கியுள்ளன.
இது, விமான நிலையத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் புயலை தாங்கும் தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடல் மட்டம் உயர்வு மற்றும் இயற்கை காரணிகள், களிமண் அடித்தளத்தால் மிகப்பெரும் எடையை தாங்கி நிற்க முடியாத நிலை ஆகியவற்றால், விமான நிலையம் மூழ்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விமான நிலையம், ஜப்பானின் பிராந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
