டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு சேதம்! DGCA விசாரணை
டெல்லி விமான நிலையத்தில் Taxiing இன் போது பயணித்த ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் சரக்கு கொள்கலனில் சிக்கியமை தொடர்பில் , இந்திய விமான கண்காணிப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஆனால் விமானத்தின் இயந்திரம் சேதமடைந்து பழுதுபார்ப்பதற்காக அது தரையிறக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஈரான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியதால், விமான நிறுவனங்கள் விமானங்களை வேறு பாதைக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர்பஸ் A350 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லிக்குத் திரும்பியது.
விமானம் ஓடுபாதை
பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு, விமானம் ஓடுபாதையை விட்டு வெளியேறி, பயணிகளுடன் பார்க்கிங் பேயில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு கொள்கலன் அதன் வலது எஞ்சினில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அடர்த்தியான மூடுபனி காரணமாக தெரிவுநிலை "ஓரளவு" இருந்தது என்று விமான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
கொள்கலன் உள்வாங்கப்பட்டபோது விமானத்தில் சுமார் 240 பயணிகள் இருந்ததாக ஏர் இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்திய உள்ளூர் நேரப்படி 05:25 மணியளவில் (புதன்கிழமை 23:55 GMT) விமானம் நிறுத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பப்படும் ஏப்ரன் பகுதியை நோக்கி Taxiing செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானம் தரையிறக்கப்படுவதால் "தேர்ந்தெடுக்கப்பட்ட A350 வழித்தடங்களில் சாத்தியமான இடையூறுகள்" குறித்தும் ஏர் இந்தியா எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |