விளக்கமறியலில் உள்ள கஸ்ஸப்ப தேரரை சந்திக்க சென்ற விமல் வீரசன்ச!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற தீர்பிற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர்களை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (16.01.2026) சந்தித்துள்ளார்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (16.01.2026) திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்று இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேரர்களை சந்தித்துள்ளார்.
கைது நடவடிக்கை
இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது பின்புலத்திலேயே குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உந்துதலுடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.
இவ்விடயம் தெட்டத்தெளிவாக புலப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீலரதன தேரரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர்களை இன்று சென்று சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் அமைச்சர்களே அவருடைய வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |