புகை மண்டலமாகும் இந்திய தலைநகரம்
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அங்கு காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் வளிமண்டலத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்களின் அளவு இருக்க வேண்டிய மதிப்பை விட ஐநூறு மடங்கு அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
காற்று மாசுபாடு
மேலும், உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் இந்தியாவின் தலைநகரான புது டில்லி பல சந்தர்ப்பங்களில் இடம் பெற்றுள்ளது.
அதன்படி, தலைநகரில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் வரும் 10ம் திகதி வரை விடுமுறை வழங்க டெல்லி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில், புது டில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் உயர்கிறது.
கட்டுபடுத்தும் திறன்
டெல்லிக்கு அருகில் உள்ள பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் அறுவடைக்குப் பின் வைக்கோல் எரிப்பது உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நிலை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காற்று மாசுபடும் வீதத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு திறன் இந்தியாவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.