பிரான்ஸில் அதிகரிக்கப்போகும் விமான கட்டணங்கள்
France
By Sumithiran
விமான பயணசீட்டுக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் விமான பயணச்சீட்டுகளின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் Clément Beaune தெரிவித்துள்ளார்.ஆனால், எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
விமான பயணச்சீட்டுகளைவிட

பலர் தன்னிடம், விமான பயணச்சீட்டுகளைவிட, ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தெரிவிப்பதாகக் கூறும் அவர், ரயில்வே துறையில் முதலீடு செய்ய பணம் தேவைப்படுகிறது என்றார்.
எனவே, 2024ஆம் ஆண்டின் பட்ஜெட்டில், விமான பயணச்சீட்டுகள் மீதான வரியை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்த அவர் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை ரயில்வே துறையில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி