பிரித்தானிய விமான நிறுவனமொன்றில் 1000 வேலைவாய்ப்புகள்: தகுதியுடையோருக்கு அரிய வாய்ப்பு
England
World
By Dilakshan
பிரித்தானியாவை சேர்ந்த விமான நிறுவனமொன்று புதிதாக 1000 விமானிகளை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, லண்டனை மையமாக கொண்ட easyJet விமான நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
அத்தோடு, குறித்த விமான நிறுவனமே புதிதாக இணைக்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதால் முன் அனுபவம் இல்லாதவர்களும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பம்
அதேவேளை, easyJet விமான நிறுவனம் விமானிகளாக அதிகமாக பெண்களை பணியமர்த்த விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தகுதியுடையவர்களும் விருப்பம் உள்ளவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என easyJet விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
மரண அறிவித்தல்