வெளிநாடொன்றில் அவசரமாக ரத்து செய்யப்பட்ட பல விமான சேவைகள்!
ஹாங்காங்கில் (Hong Kong) பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹாங்காங்கை நெருங்கிவரும் ரகாசா எனப் பெயர்கொண்ட சூறாவளியை தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் 23 ஆம் திகதி இரவு எட்டு மணி முதல் 25 ஆம் திகதி காலை எட்டு மணி வரை 36 மணிநேரத்துக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனம்
குறித்த விடயம் குவான்டாஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளிடம் அறிக்கை வழியாக மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு மாற்று திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
முழு கட்டணம்
பயணங்களை மேற்கொள்ள விரும்பாதோருக்கு முழு கட்டணமும் திரும்பத் தரப்படும் என்று ஸ்கூட் தொடர்புபட்ட விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பயன்படுத்தப்படாத பயண சீட்டுக்கான பற்றுச்சீட்டுக்களை கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி பயணிகளுக்கும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங் நகரைத் தவிர்த்து, அவற்றின் மற்ற வட்டாரங்களுக்கான விமானப் பயணங்களும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
