பயங்கர ஆயுதங்களுடன் விமான நிலைய பாதுகாவலர் அதிரடி கைது!
மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து T-56 துப்பாக்கி மற்றும் பல்வேறு ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று (15) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணையில் சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரியும், 45 வயதுடைய மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதன்படி, சந்தேக நபரிடமிருந்து ஒரு T-56 துப்பாக்கி, ஒரு T-56 மெகசின், 14 T-56 தோட்டாக்கள், 01 பிஸ்டல் மற்றும் 01 மெகசின், 09 2.5 மிமீ தோட்டாக்கள், 09 9mm தோட்டாக்கள், 02 பிஸ்டல் மற்றும் ரிவால்வர் வகை துப்பாக்கிகள், 03 வாள்கள் மற்றும் 02 கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து மினுவாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்
