லெபனான் மீது வான் தாக்குதல் - இஸ்ரேல் அதிரடி
Israel
Lebanon
By Kiruththikan
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. லெபனான் - சிரியா எல்லைகளிலும் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், சிரியா எல்லையில் லெபனான் நாட்டின் குவசயா நகரில் பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று வான் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல்
இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழு சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலையடுத்து பாலஸ்தீனிய ஆயுதக்குழு இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
