பூஜித -ஹேமசிறி விடுதலையில் அரசியல் சூழ்ச்சி! உண்மையயைப் போட்டுடைந்த எதிர்க்கட்சி
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் சம்பவம் நாட்டின் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பீ.பெரேரா (Ajith P. Perera) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி வேண்டும்.
இந்த உயிரத்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பொறுப்பான பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டிக்க வேண்டிய கடமை அரசாங்கம், அரசாங்கத்தின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்துறையினருக்கு உண்டு.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதியரசரின் தீர்ப்பை அலசினால் பல முக்கிய உண்மைகள் வெளிவருகின்றன.
வரவிருக்கும் தீர்ப்பை சிந்திக்கும் போது சட்டமா அதிபர் திணைக்களம் அவர்களின் செயற்பாட்டின் தரம் மற்றும் அவர்களின் செயற்திறனின் வினைத்திறன் ஆகியவற்றின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து கடுமையான கேள்வி எழுகிறது.
ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்காவிட்டால், சமுதாயத்திற்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ நீதி கிடைக்காது, பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியாவிட்டால், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால், நீதி கிடைக்காது.
எனவே 800/900/1000 என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் நீதி கிடைக்காது. இன்று இந்த நாட்டில் உள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தின் தன்மையைப் பார்க்கும் போது, அரசியலில் ஈடுபட்டவர்கள் ஊழல் வழக்குகளை மீளப்பெறுவது ஒருபுறம், மறுபுறம் நிரபராதிகளாக விடுவிக்கப்படுவது, மறுபுறம் ஆதாரமற்றவை என நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகளை விடுவிப்பது என்றவாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
எனவே நீதி நிர்வாகம் தொடர்பில் முழு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அணுகுமுறையும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பலத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி, அவர்களின் தொழில்சார் கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், அரச சட்டத்தரணிகளின் எண்ணிக்கையை 118இல் இருந்து 218 ஆக அதிகரிக்கவும் நல்லாட்சி அரசாங்கம் பெரும் பணியை செய்தது.
மிகவும் திறமையான, அதிக சுதந்திரமான, சிறந்த சட்டமா அதிபர் திணைக்களத்தை நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நோக்கம் இப்போது அடையப்படுவதாகத் தெரியவில்லை.
சட்டமா அதிபர் திணைக்களம் இந்நாட்டு பிரஜைகளை பாதுகாக்கவே உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் தனது நோக்கத்தை அடையவில்லை என்றால், அந்த நம்பிக்கையை இழந்தால், குடிமகன் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகலாம்.
அந்த உதவியற்ற நிலையே இந்த சமூகத்தில் ஸ்திரமற்ற நிலைக்கு வழிவகுக்கும்.எனவே, இந்நிலைமையைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களையும் உத்திகளையும் சட்டமா அதிபர் திணைக்களம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
