பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹனவின் மனைவி விபத்தில் படுகாயம்
கொழும்பு பித்தல சந்தியில் குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதியால் ஏற்பட்ட விபத்தில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹனவின் மனைவி காயமடைந்துள்ளதாக கொம்பனித் தெரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹனவுக்கு வழங்கப்பட்ட காவல்துறை கார் பித்தல சந்தியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞையில் நிறுத்தப்பட்டபோது, குடிபோதையில் சாரதி ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த பிரதி காவல்துறை மா அதிபரின் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி மதுபோதையில் காரை ஓட்டி நபர் ஒருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த காரில் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
