சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் : அமெரிக்கா நாளை முக்கிய முடிவு
“அருண திசாநாயக்க” என தவறாக பொறிக்கப்பட்ட சிறிலங்கா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பெயரை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) சிலமணிநேரத்தில் சரிசெய்திருந்தாலும் இலங்கையில் இருந்து அமெரிக்காவை நோக்கிய ஏற்றுமதிப்பொருட்களுக்கு 30 வீத வரி என்ற விடயத்தில் எந்த மாற்றங்களையும் அவர் செய்யவில்லை.
அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு இலங்கையில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களுக்குரிய கொள்கைகள் மற்றும் தடைகளை நீக்கினாலே இந்த 30 வீத வரி குறைக்கப்படும் என்பதே சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ள செய்தியாக உள்ளது.
வரிகள் மட்டுமல்ல அமெரிக்காவுக்கு இலங்கையின் எரிசக்தி துறை கட்டமைப்பில் அதிக வாய்ப்புகள் உட்பட இலங்கை தொடர்பான அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் தந்ரோபாயத்துக்கு இலங்கையில் இருந்து வரக்கூடிய தடைகள் நீக்கப்படவேண்டும் என்ற மறைமுக செய்தியும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட்ட சில நாடுகளில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்னர்த்தப்படும் 20க்கு மேற்பட்ட பொறுப்புகூறல் திட்டங்களுக்கு,
அமெரிக்கத்தரப்பில் இருந்துவழங்கப்படும் நிதி உதவியை நிறுத்துவது தொடர்பான பரிந்துரை தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் நாளை (யூலை11) தனது தரப்புவாதங்களை முன்வைக்க உள்ள நிலையில் ரம்ப்பின் 30 சதவீத வரிவிதிப்புக்கடிதம் இலங்கைக்கு கிட்டியுள்ள நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
