கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் பெரும் திருட்டு: சந்தேகநபரை தேடி வலைவீச்சு
கொழும்பில் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாட்டுக்காக வருகைத்தந்த ஒருவரின் மடிக்கணினி உள்ளிட்ட பெருமதியான பொருட்கள் கலவாடப்பட்டுள்ளன.
பிராத்தனைக்கான நேற்று (09.07.2025) மதியம் 12.45 மணியளவில், வழிபாட்டுக்காக வருகைத்தந்தவரிடமிருந்தே இந்த பொருட்கள் கலவாடப்பட்டுள்ளன.
இதன் போது இரண்டு மடிக்கணினிகள் மற்றும் ஒரு தாய் பலகை(Mother board) ஒரு பக்கவாட்டு கைப்பை மற்றும் ஒரு தொலைபேசி, பணப்பை மற்றும் மதிப்புமிக்க ஆவணங்கள் அடங்கிய ஒரு பை ஆகியவையே இவ்வாறு கலவாடப்பட்டுள்ளன.
காவல்துறைக்கும் தகவல்
தேவாலயத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த நிலையில், பூஜையின் முடிவில் பலிபீடத்திற்கு நடந்து சென்ற இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தேவாலயத்தின் பாதிரியாருக்கும் காவல்துறைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள், 077-2156200 / 071-8524141 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
