உயர்தர பரீட்சையை முன்னிட்டு நாளை முதல் விசேட பாதுகாப்பு - விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தேர்வு மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், வட்டார மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள், வினாத்தாள் மதிப்பீட்டு மையங்கள் மற்றும் பிற இரகசிய ஆவணங்களை கொண்டு செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், பரீட்சை நடைபெறும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நடமாடும் ரோந்து மூலம் பரீட்சை நிலையங்களை உன்னிப்பாக அவதானித்து போதிய பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.
நாளை முதல் பரீட்சை
உயர்தரப் பரீட்சை நாளை முதல் நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 331,709 பரீட்சார்த்திகள் பரீட்சையை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

