உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன
Ministry of Education
G.C.E.(A/L) Examination
By Dharu
உயர்தர பரீட்சை 2021 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (17) இந்த பெறுபேறுகள் வெளியானதாகவும், அதனை Doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை

பரீட்சைக்குத் தோற்றிய 27,012 பரீட்சார்த்திகள் இம்முறை பெறுபேறுகளை மீள்மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இந்த மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி