பங்களாதேஸின் புதிய ஜனாதிபதியானார் ஆலம்கீர்
பங்களாதேஸின் புதிய ஜனாதிபதியாக மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் 23ஆவது ஜனாதிபதியாக தெரிவானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல்நலக் காரணங்களால் 76 வயதான தற்போதைய ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவி விலகியதை தொடர்ந்து பங்களாதேஸின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது.
பெரும்பான்மை வாக்குகள்
இதற்கமைய புதிய ஜனாதிபதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2024-ல் இளைஞர்களின் போராட்டங்களால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பெப்ரவரி 12 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5