சிறிலங்காவில் சடுதியாக குறைந்து வரும் மதுபான பாவனை..! வெளியான தகவல்
நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக இவ்வாறு கடந்த காலத்திலத்துடன் ஒப்பிடும் போது மது பாவனை குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (27) மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 22 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்தமையால் கடந்த காலங்களில் மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பட்டன.
இதனை தொடர்ந்து நாட்டில் மது பாவனையானது குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.