முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி!
Mullaitivu
Ranil Wickremesinghe
By pavan
மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜாவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் அவருக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றம் வரும் நாள்களில் வழங்கி வைக்கப்படவுள்ளது.
நியமனம்
முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார்.
2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான் நீதிமன்றங்களிலும் கடமையாற்றியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி