ஈரான் அதிபரின் இறுதிச் சடங்கு: பங்கேற்கப்போகும் இலங்கை எம்.பி
Ali Sabry
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
Iran President
By Dhilak
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் ஈரான் அதிபர் ரைசியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இறுதி ஊர்வலம்
இந்நிலையில், ஈரானின் (iran) அதிபர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்களில் மரணம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு வரும் நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரசிங்க மற்றும் அமைச்சர் அலி சப்ரியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்