துருக்கி ஜனாதிபதி அளித்த பரிசால் அதிர்ச்சியில் உறைந்துபோன 'நேட்டோ' தலைவர்கள்
துருக்கியில் நடந்த, 'நேட்டோ' அமைப்பின் உச்சி மாநாட்டில், அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் வழங்கிய நினைவு பரிசு, நேட்டோ தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இம்மாநாட்டின் முடிவில், நேட்டோ அமைப்பின் தலைவர்களுக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சார்பில் ஒரு மரத்தாலான பெட்டி வழங்கப்பட்டது.
இயங்கு நிலையில் துப்பாக்கி
அதில், அவர்களின் பெயர் செதுக்கப்பட்ட, 'குமுசே 357 மேக்னம்' ரக கை துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், துப்பாக்கியை சுத்தம் செய்யும் கருவி மற்றும் துருக்கியின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து இந்த துப்பாக்கிக்கு விலக்கு அளிக்கும் சான்றிதழ் உள்ளிட்டவை இருந்தன.

துப்பாக்கி இயங்கும் நிலையில் இருந்ததோடு, தோட்டாக்களும் அதனுடன் இருந்ததால், அவற்றை சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும், தங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்வதில் அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
துப்பாக்கியை தூதரகங்களில் விட்டுச் சென்ற தலைவர்கள்
பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், தன் நாட்டில் தரையிறங்கிய பின், பரிசு பொருளை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதனை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் தங்கள் விமானங்களில் ஏறுவதற்கு முன்பாகவே பரிசு பொருளை திறந்து பார்த்தனர். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை துருக்கியில் உள்ள தங்கள் துாதரகத்திலேயே வைத்து விட்டுச் சென்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |