கனேடிய பிரதமரின் தமிழினப் படுகொலை அறிக்கை - கனடா உயர்ஸ்தானிகருக்கு இலங்கை அழைப்பு!
கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் அவர்கள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தமிழினப் படுகொலை குறித்த கனேடியப் பிரதமரின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக கனேடிய உயர்ஸ்தானிகருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மே 18 ஆம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட இனப்படுகொலை அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் முற்றாகக் கண்டித்துள்ளதுடன், அதனை முற்றாக நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அலி சப்ரி
அரசியல் சார்புடைய இந்தக் கூகருத்துக்கள் சர்ச்சைக்குரிய அறிக்கை எனவும், கனடாவின் உள் அரசியல் நலன்களுக்காக இது வெளியிடப்பட்டது எனவும் தெரிவித்து அமைச்சர் சப்ரி மறுத்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பாக விசாரிப்பதற்காக கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.
