அலி சப்ரி எடுத்த திடீர் முடிவு
இனி ஒருபோதும் நாடாளுமன்றத்தில் பணியாற்றப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நான் இந்த நாடாளுமன்றத்தை மீண்டும் பார்க்க மாட்டேன், எனக்கு இது தேவையில்லை. இவ்வாறான சூழலைக் காண நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையவில்லை. இனி ஒருபோதும் இங்கு திரும்பி வரமாட்டேன், ”என்று கடுமையாகச் சாடினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“ நான் வாதம் செய்ய வரவில்லை. மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடவே வந்தேன். நாட்டில் நெருக்கடியை உருவாக்கி ஒருவரையொருவர் நோக்கி விரலை நீட்ட முயற்சித்தால் அந்த விரலை வெற்றி வரலாறு வரை நீட்ட வேண்டும்.
இந்த நேரத்தில் செய்ய வேண்டியது, ஒருவரையொருவர் விமர்சித்துக்கொள்வதை விடுத்து, நாட்டின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதே.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் முன்னர் 42 மில்லியன் ரூபாயை அரசாங்கத்திற்கு வருமான வரியாக செலுத்தியுள்ளேன். பொதுப் பணத்தை ஒருபோதும் அபகரிக்கவோ, திருடவோ இல்லை” என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
