பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் அனைத்து கட்சி மாநாடு
இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையிலான போரை முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து மாநாடொன்றை நடத்தியுள்ளன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல்களை மேற்கொண்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ளது.
உடனடி போர் நிறுத்தம்
இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதனால் காசாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த பின்னணியில், காசாவில் உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் கோரியுள்ளன.
சமாதான மாநாடு
எனினும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், குறித்த விடயத்தை வலியுறுத்தும் வகையில் “போர் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் கடும் மழைக்கு மத்தியிலும் இன்று கொழும்பில் சமாதான மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பல சுயாதீன அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிஐந்தனர்.
இதனை முன்னிட்டு குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.